யாழ்ப்பாணம் – காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா நாளை 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.