மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் 2024 ம் ஆண்டுக்கான பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் உள்ள வசந்தபுரம் பொம்மைவெளி கிராமத்தில் உள்ள சிறுவர்களுடன் இன்று (15) கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று (15) காலை வசந்தபுரம் கிராமத்தின் பங்கு தந்தை ஜோன் போல் அவர்களின் தலைமையில் அண்ணா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
வசந்தபுரம் பொம்மை வெளி கிராமமானது மிகவும் பின்தங்கிய நிலையில் பல சவால்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களே உள்ளார்கள்.
இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்களின் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் பொங்கல் நிகழ்வை கொண்டாடுவதற்கு குறித்த கிராமம் தெரிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டார்கள்.