வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று இடம்பெற்றது!

வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்லவராயன்கட்டு மாதிரி கிராமத்தில் சிறிநாகபூசனி அம்பாள் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பாரம்பரிய முறையில் பல்லவராயன் கட்டு சந்தியில் புதிர் எடுக்கப்பட்டு விழா மண்டபம் வரை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து எடுத்து வரப்பட்ட புதிர் பாரம்பரிய முறைப்படி அரிசியாக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது.

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானதுடன், கலை நிகழ்வுகளும் அரங்கில் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews