மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட ரயில் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம்புரண்டதால் நேற்று 3.00 மணி முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் தடைப்பட்டன.
இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கு வருகை தந்த பயணிகள் தலவாக்கலை ரயில் நிலையத்திலிருந்து பஸ்களின் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படிருந்தன.
இதனால் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்து பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
நேற்று ரயில் தடம்புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான மூன்று ரயில் சேவைகள் இரத்தச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக பல தடவைகள் ரயில்கள் தடம் புரள்வு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது