யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் மூன்றாவது பட்டத் திருவிழா

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரில் விளையாட்டு கழகம் நடாத்தும் மூன்றாவது பட்டத் திருவிழா வணபிதா  ஜே. ரமேஸ்  தலமையில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக விருந்திரனர்கள் விழா அரங்குவரை மலர் மாலை அணிவித்துவரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
சுடர்களை கட்டைக்காடு பங்குத்தந்தை ஏ.அமல்ராஜ்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்,
மருத்தங்கேணி போலீஸ் நிலைய பதில்  பொறுப்பதிகாரி  பங்குத்தந்தையும், கட்டைக்காட்டை சேர்ந்தவரும், வணபிதாவுமான  ரமேஸ், கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி.ரஜித்  உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தேசிய கொடியினை மருதங்கேணி போலீஸ் நிலைய பதில் பொறுப்பு அதிகரி ஏற்றியதை தொடர்ந்து கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு  கழக கொடியினை அதன் தலைவர் ரெஜித்  ஏற்றினார்.
தொடர்ந்து ஆசியுரையை கட்டைக்காடு பங்குதந்தை, ஏ.அமல்ராஜ்,   வெற்றிலைக்கேணி நாகதம்பிரான் ஆலய பிரதம குரு ஞானசம்மந்தக்குருக்கள்  ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வை  சம்பிர்தாயபூர்வமாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் போட்டியை சம்பிர்தாயபூர்வமாக தொடக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. இதில் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி பகுதிகளிலிருந்து பல பட்டக்கள் போட்டிகளில்  பங்குபற்றின.
இதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டத்திற்க்கான பரிசாக ரூபா 100000/- மும்  இரண்டாவது பரிசாக ரூபா 50000/-  மும் மூன்றாவது பரிசாக ரூபா 25000 மும், பத்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன..
குறித்த பட்ட போட்டி மூன்றாவது தடவையாக. இடம் பெற்றுவருவது குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews