மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

7 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து, 300,000 கூடுதல் குடும்பங்கள் அஸ்வெசும சமூக நலத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews