தீவு ஒன்றில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில், 56க்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பகுதியில் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில், நீண்டகால தீர்வு ஒன்றை தேடுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கடந்த மாத இறுதியில் டியாகோ கார்சியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கனடாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த ஏதிலிகளின் படகு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, அதில் இருந்தவர்கள் டியாகோ கார்சியாவில், 2021 ஆம் ஒக்டோபர் மாதம் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட பலர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews