கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews