சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடி{வில் உள்ள நேஷனல் தியேட்டர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கையில், சோமாலியாவில் வரலாற்று நிகழ்வாக 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகர் மொகடி{வில் உள்ள நேஷனல் தியேட்டர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. சோமாலிய இளைஞர்களும், பெண்களும் உற்சாகமாகத் திரைப்படங்களைப் பார்த்தனர். பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து சோமாலியாவில் உள்ள திரையரங்குகள் திரைப்படங்கள் அச்சமின்றி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் தியேட்டர் இயக்குநர் அம்தி யூசப் கூறும்போது, இது வரலாற்று நிகழ்வு. பல ஆண்டுகளுக்கான சவால்களுக்குப் பிறகு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சோமாலிய இளைஞர்கள் கூறும்போது, ”எங்களது வரலாற்றைத் தெரிந்துகொள்ளத் திரைப்படங்கள் உதவின என்று குறிப்பிட்டனர்.
1991ஆம் ஆண்டுக்குப் பிறகு சோமாலியாவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் சோமாலியாவில் பொதுமக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தனர். இதனைத் தொடர்ந்து பல முறை திரைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 30 வருடங்களுக்குப் பிறகு நேஷனல் தியேட்டரில் திரைப்படம் வெளியிடப்பட்டது.
சோமாலிய அரசுக்கு எதிராக அல்கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் அந்நாட்டில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச்சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீபகாலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்