பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை 30 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, இந்த தொகை 115 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளதுடன்
முன்பு ஒரு சாப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 85 ரூபாயாக இருந்துள்ளது
அந்தத் தொகைக்கு இனி மதிய உணவு வழங்க முடியாது என்று உணவு வழங்குநர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை அதிகரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
அந்த உணவுக்காக 115 ரூபாவை ஒதுக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.