டெங்கு பரவும் அபாயத்துடன் கடைச்சூழலை வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அரசாங்க அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் 23.01.2024 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக, யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி நகர்ப்புறங்களில் உள்ள கடையுரிமையாளர்கள் சுகாதார பிரிவினால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் 61631 அடையாளப்படுத்தி வர்த்தக சங்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி தயாரிக்கப்பட்டு வர்த்தக சங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட செவ்வை பார்க்கும் பட்டியலுக்கு அமைவாக எதிர்வரும் 2024.01.27 ஆம் திகதி சனிக்கிழமை சமூகப் பொறுப்புடன் தங்கள் வியாபார/தொழில் முயற்சிக்குரிய கட்டடம், காணி மற்றும் சுற்றுச்சூழலினை நுளம்பு பெருகாதவாறு துப்பரவு செய்யுமாறும் தொடர்ந்தும் இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
இச் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்காத டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் கடைச்சூழலினை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews