நடுவானில் இடம்பெற்ற விபத்து

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது, ​​நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 04 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும்,
ஏனைய இருவர் இராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews