இன்றைய ராசி பலன்கள் 04.02.2024

*  தை: 21.*
*ஞாயிறு-கிழமை_*
*_📆 04- 02- 2024*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். ரகசியமான செயல்பாடுகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை தெரிவிக்கவும். சாந்தம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️அஸ்வினி : ஆதாயம் ஏற்படும்.
⭐️பரணி : அனுபவம் உண்டாகும்.
⭐️கிருத்திகை : கருத்துக்களில் கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாகும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️கிருத்திகை : பாராட்டு கிடைக்கும்.
⭐️ரோகிணி : லாபம் மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
⭐️திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனை மேம்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
⭐️பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️ஆயில்யம் : லாபம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொல்லை குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மகம் : தெளிவு பிறக்கும்.
⭐️பூரம் : ஏற்றம் உண்டாகும்.
⭐️உத்திரம் : புரிதல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தேர்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
⭐️அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️சித்திரை : போட்டிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திட்டமிட்ட காரியத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் சந்திப்பு உண்டாகும். வருமான வாய்ப்பு மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு.

⭐️சித்திரை : திருப்தியான நாள்.
⭐️சுவாதி : வாய்ப்பு மேம்படும்.
⭐️விசாகம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.

⭐️விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️அனுஷம் : பொறுப்புகள் மேம்படும்.
⭐️கேட்டை : முயற்சி ஈடேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். கடல் கடந்த பயணம் பற்றிய எண்ணம் மேம்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதம் தோன்றி மறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️மூலம் : சாதகமான நாள்.
⭐️பூராடம் : அனுபவம் உண்டாகும்.
⭐️உத்திராடம் : விவாதம் முடிவுக்கு வரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
வெளியூர் தொடர்பான பணிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் மேம்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.

⭐️உத்திராடம் : சுபமான நாள்.
⭐️திருவோணம் : பொறுப்பு கிடைக்கும்.
⭐️அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
வியாபாரப் பணிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சலனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️அவிட்டம் : பொறுமையை கடைபிடிக்கவும்.
⭐️சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️பூரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
ஆன்மிகம் தொடர்பான சிந்தனை மேம்படும். தனவருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான சில செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் எதிர்கால சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐️உத்திரட்டாதி : செலவுகள் ஏற்படும்.
⭐️ரேவதி : சிந்தனை அதிகரிக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews