மன்னார்  வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு ஆளுநரினால் திறந்து வைப்பு.

மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை(9) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் விருந்தினராக கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன்,மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகள்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் இ.ஜே.புஸ்பகாந்தன் உற்பட வைத்தியசாலை பணியாளர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து  மகப்பேற்று சிகிச்சை பிரிவு புனரமைப்பு பணிகளின் போது பல்வேறு வகையிலும் உதவியவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews