இலங்கை பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அதற்கு பதிலாக மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர சோதனை நடவடிக்கையால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனது.

இந்நிலையில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதைப் போன்று, முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சில நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews