*⭕ TODAY |தவக்காலம் ஆரம்பம் | Ask Wednesday ✪★⭑⭑*
*➕திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.*
*இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.*
*இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.*
*திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.*