பிலியந்தலையில் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்னர்.
சித்தமுல்ல, சுமக மாவத்தையில் உள்ள வீடொன்றிற்குள் பலவந்தமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதோடு
இதன்போது வீட்டின் உரிமையாளர்களை தாக்கியதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களில் தாயும் மகனும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.