அதிரடியாக உயர்ந்த கரட்டின் விலை

நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று  360 ரூபாயாக குறைந்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 360 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்தோடு, மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பினால் நுகர்வோரின் கொள்வனவு நிலை இன்னும் வழமைக்கு திரும்பாத காரணத்தினாலும் கரட் உற்பத்தி அதிகமாகியிருப்பதாலும் சந்தையில் கரட்டின் விலை குறைந்துள்ளது.

தற்போது நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதால் மலையகத்தில் மரக்கறி உற்பத்தி  முன்னரைப் போன்று அமைந்துள்ளது.

இந்நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் மலையகத்தில் குறைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வட்டாரத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews