*⭕வரலாற்றில் இன்று________FEB 26*

*⭕வரலாற்றில் இன்று________FEB 26*

*1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.*

*1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.*

*1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.*

*1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.*

*1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.*

*1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.*

*1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.*

*1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.*

*1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.*

*1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.*

*1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.*

*2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.*

*2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.*

*2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்.*

Recommended For You

About the Author: Editor Elukainews