இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு?

இந்திய கிரிக்கெட் வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக் நடப்பு ஐ.பி.எல்(IPL) தொடருடன்  IPL  மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தினேஷ் கார்த்திக் அனைத்து ஐ.பி.எல்(IPL) தொடர்களிலும் விளையாடிய இவர், டெல்லி டேர்டவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக ஐ.பி.எல்(IPL) தொடர்களில் விளையாடியுள்ளார்.

அதேவேளை,  இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60   T 20 கிரிக்கெட் போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews