நாட்டில் வேலையில்லா வரிசையில் 40,000 பட்டதாரிகள்..!

அரசியல்வாதிகளின் ஏமாற்று கதைகளுக்கும்இ விசித்திரக் கதைகளுக்கும் அடிமைப்பட்டுஇ அரசியல் அதிகாரங்களின் கைக்கூலிகளாக மாறும் காலம் ஒழிக்கப்பட வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசியல், மத, சமூக, கலாச்சார, பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளுக்கான சரியான சூழலை உருவாக்குவதன் மூலம் குடிமக்களின் திறமைகளால் உயர் நிலைகளுக்கு செல்வதற்கான காலம் வந்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

தற்போது கிட்டத்தட்ட 40,000 பட்டதாரிகள் நமது நாட்டில் வேலையின்றி உள்ளனர். இலவசக் கல்வியில் கல்வியைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற 40,000 பேரை வேலையில்லாதோர் வரிசையில் நிற்க வைப்பது நியாயமானது அல்ல.

இந்த 40,000 பேர் கல்வியில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே வேலையின்மை வரிசையில் நிற்பதாக  தெரிவித்தார்.

இலங்கையை முதல் ஸ்தானத்திற்கு கொண்டு வரும் கொள்கையை முன்னெடுப்பதற்கு, ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வியறிவு, கணினி அறிவு என்ற பரப்பில் கூடிய ஈடுபாட்டை காட்ட வேண்டும்.

ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதில்இ கல்வி கூட ஸ்மார்ட்டாக அமைய வேண்டும், எனவே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்மார்ட் கல்விக்காக முதலீடு செய்யும் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews