சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன.

12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தாத உலகளாவிய பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு முதல் செலுத்தப்படாத வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை நோக்கும் போது, பத்திரதாரர்களைக் கொண்ட ஒரு வழிகாட்டுதல் குழு, இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்குள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதே பிரதான நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் தனியார் கடன் வழங்குநர்களுடன் புதிய கடன் மறுசீரமைப்பு முன்மொழிவை இலங்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews