ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று (29) காலை 10:45 மணியளவில் திருமுறை ஓதலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து வெளியீட்டு உரையினை இளைப்பாறிய ஆசிரியர் வ.கணேசமூர்த்தி நிகழ்த்தியதை தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை சைவப்புலவர் ஆசிரியர் பாபுதரன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ந்து  தெல்லிப்பளை  யா.தந்தை செல்வா தொடக்க பள்ளிக்கு ரூபா 20000/- பெறுமதியான பரிசுப் பொருட்களும், தொண்டமனாற்றை சேர்ந்த முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட ஒருவருக்குரிய மருத்துவ உதவியாக ரூபா 50000/- யாழ் பல்கலைக்கழக 3 ம் வருடத்தில் கல்வி கற்கும் மலையக  மாணவி ஒருவருக்கு ரூபா 90000/-  பெறுமதியான மடிக்கணனியும், வட மாகாண சமூக நிர்வாக தளத்தின் பளையில்  இடம் பெற்ற  மகளிர் தின விழாவிற்க்காக 150 உணவு பொதிகளும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விபத்து சகிச்சை பிரிவிற்க்கு 30 லிட்டர் கொண்ட 40 கொள்கலன்களும், 70 லிட்டர் கொண்ட 20 கொள்கலன்களும் ரூபா 351000/- பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளதுடன் வறகொல்ல தோட்டம் சிறி முத்துமாரி அம்மன் ஆலய கட்டிட நிதிக்காக ரூபா 20000/- ஆயிரமும் வழங்கப்பட்டன.
இதே வேளை யா/மானிப்பாய் சோதிவேம்படி வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான நன்கொடையாக ரூபா 50,000 கடந்த 25/03/2024 அன்று வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews