போலிஸ் உடந்தையுடன் மாடுகள் கடத்தல்‼️‼️

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர், இன்று (04) வியாழக்கிழமை அதிகாலை பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியில் இருந்து சடடவிரோதமான முறையில் , 8 மாடுகளை கொடுமைப்படுத்தும் வகையில் கடத்தி வந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வாகனத்தினை வழிமறித்து சோதனையிட்ட போது, கால்கள் கட்டப்பட்ட நிலையில்மாடுகள் காணப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் என தெரிய வந்துள்ளது.

குறித்த மூவரும் புங்குடுதீவு பகுதிக்கு வாகனத்தில் சென்று மாடுகளை திருடி அவற்றின் கால்களை கட்டி , கொடுமைப்படுத்தும் வகையில் வாகனத்தில் ஏற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மூவரையும் கைது செய்த அதிரடிப்படையினர் , மாடுகள் மற்றும் வாகனத்தையும் கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews