யாழ் மாவட்ட பாடாசாலைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கும் வகையில் குறிப்பாக மாணவர்களுக்கிடையில் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசாங்கம் தன்னாலான உதவிகளை மேற்கொண்டுவருகின்றது என சுட்டிக்காட்டிய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேறு வழிகளில் மாணவர்கள் புலன்கள் திசைதிரும்பாத வகையில் அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களதும் துறைசார் அதிகாரிகளதும் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (05.04.2024) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களைச் சேர்ந்த 28 பாடசாலைகளுக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் அமைச்சரால் வழங்கப்பட்டபின். உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் –
இன்றையதினம் தெரிவுசெய்யப்பட்ட 28 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இன்னும் பல பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணஙகள் தேவையாக உள்ளது என்பதை நான் அறிவேன். அதுமட்டுமல்லாது வழங்கப்படும் இந்த உதவிகளும் இப்பாடசாலைகளுக்கு போதாதென்பது தெரியும். இதனால் குறித்த அமைச்சுடன் மேலும் பல உதவிகளை வழங்குவதற்காக பேச்சுக்களை மேற்கொண்டுவருகின்றேன்.
அத்துடன் தனியார் துறையினருடனும் இவ்விடயம் தொர்பில் கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்புகளையும் பெற்று மாவட்டத்தின் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்த முடியும் என்று நம்புகின்றேன்.
இதேவேளை எமது மாணவர் பருவ காலத்தில் அதாவது அன்றிருந்த சூழ்நிலை வேறு. காலச்சூழலால் அன்று ஆயுதப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்து அனைத்தையும் தலைகீழாக மாற்றி சீரழித்துவிட்டதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
நானும் இந்த ஆயுதப்போராட்ட போராளிகளில் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். ஒரு காலத்தில் ஆயுத்ப் போராட்டம் ஒன்று எமது இனத்துக்கு தேவையாகவே இருந்தது. அதற்காக ஆயுத போராட்டத்தை நான் நியாயப்படுத்தவில்லை.
முன்னெடுத்த அந்த தேவையை பயன்படுத்தி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நாம் பெற்றுக்கொண்டோம்.
அதிலிருந்து எமது போராட்டத்தை கைவிட்டு அதற்கூடாக நாம் முன்நோக்கி சென்றிருக்க வேண்டும்.
துரதிஸ்டவசமாக அளவுக்கு மீறினால் ஆமிர்தமும் நஞ்சென்ற வகையில் ஆயுதப்போராட்டம் என்ற போர்வையில் வன்முறைகள் தலைவிரித்தாடியதால் எமது சமூகம் அதாவது தமிழ் மக்கள் அதிகளவு இன்னல்களுக்குள்ளாக வேண்டிவந்தது.
ஆனாலும் 2009 இல் அது முடிவுக்கு வந்தது அமைதியாக மக்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது மீண்டும் தவறான பாதைக்கு செல்லும் வகையில் இளைஞர்களிடையே தூண்டுதல்களை சிலர் முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்வாறான நிலை எமது மக்களை மேலும் அதலபாதாளத்தக்கே கொண்டுசெல்லும்
ஆனாபடியால் ஆசிரியர்கள் குறிப்பாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் இவற்றில் அதிக அக்கறை செலுதத்தி மாணவர்கள் புலன்கள் திசைதிரும்பாத வகையில் அவர்களை வழிப்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தியதுடன் வடக்கு மாகாணத்தின் இளைஞர்களை விளையாட்டுத் துறைநோக்கிய திசையில் அதிக ஆர்வத்தை ஈர்க்க முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.