மன்னம்பிட்டிய பால் தொழிற்ச்சாலை திறப்பு

பால் உற்பத்தியில் தன்னிறைவான நாட்டை உருவாக்கும் நோக்கில் சிறியளவிலான பால் உற்பத்தி மத்திய நிலையங்களை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மனனம்பிட்டிய பால் உற்பத்திச்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரான்ஸ் அரசின் நிதியுதவியில் இந்த பால் உற்பத்திச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்கென 650 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரும் கலந்துகொண்டார்.

பால்மாவிற்கு பதிலாக பசும்பால் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews