2024 ஆம் ஆண்டின் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ண இறுதி போட்டி நேற்று 07.04.2024 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
மாலை 06.00 இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி MAJ GEN Wickramasinghe தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில்
522 படையணியின் BDE COMD dodamwala,
52 படையணியின் MAJ GEN Yahampath,
வெற்றிலைக்கேணி கடற்படை தளபதி Commander GB DHAMMIKA RSP,
மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி u.m.j.w.k அமரசிங்க,
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி,கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் மேடை நோக்கி வரவேற்கப்பட்டு விருந்தினர்களுக்கு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபின் போட்டி ஆரம்பமானது
குறித்த போட்டியில் வடமராட்சி அணியை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணி மோதிக் கொண்டது
ஆட்டத்தின் ஆரம்பமே விறுவிறுப்பாக ஆரம்பமாக சில நிமிடங்களில் சென்மேரிஸ் அணி தனது முதலாவது கோலை பதிவு செய்ய ஆட்டம் மேலும் சூடுபிடித்தது
ஆட்டத்தின் இறுதிவரை மிக வேகமாக ஆடிய வடமராட்சி அணி இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்-சிங்கள புத்தாண்டு வெற்றிக் கிண்ணத்தை 3-1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தமதாக்கி பொண்டனர்.
1ஆவது 2ஆவது இடத்தை பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணத்துடன் சான்றிதழ்களும் இலங்கை இராணுவத்தின் யாழ்மாவட்ட கட்டளை தளபதியால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது