யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம்(9) வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.