புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு
பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்புப் பரிசோதனைகள்.
தற்போதைய புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரிப்பகுதியில் விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகள் பூநகரி பொதுசுகாதார பரிசோதகர் குழாமினால் மேற்கொள்ளப்பட்டது.
பூநகரி பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் பூநகரி,ஜெயபுரம்,முழங்காவில் பிரிவுகளின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகளை நடாத்தினர்
வாடியடி,ஞானிமடம்,ஜெயபுரம்,பல்லவராயன்கட்டு,நாச்சிக்குடா,முழங்காவில் போன்ற பகுதிகளில் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பரிசோதனைகளில் கைப்பற்றப்பட்ட சுகாதாரத்துக்கு கேடான பொருட்கள் வர்த்தகரின் சம்மதத்தோடு அழிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட ஒருதொகுதி உணவுப்பொருட்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வீதியோரங்களில் சுகாதாரமற்ற முறையில் நடைபெறும் பழச்சாறு,வடை மற்றும் சரபத் வியாபாரம் செயவோர் எச்சரிக்கப்பட்டதோடு சரியான சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. மீறிச்செயற்படுவோர்மீது தொடர் கண்காணிப்பின்போது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.