சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர்  பொலிஸாரினால் கைது

மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட நால்வர்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் இணைந்து மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட பாளுகாமம் பிரிவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாணிக்க கற்கள் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர், ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட போது,பதில் நீதவானால்  குறித்த இருவருக்கும் தலா 12,500/= வீதம்  தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும்  25000/= ரூபாய் தண்ட பணத்தை செலுத்தியுள்ளதுடன், ஏனைய இரண்டு பேரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணித்துள்ளதாக,  மஸ்கெலியா பொலிஸ் நிலைய நீதிமன்ற சார்ஜன்ட் பேரின்பநாயகம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews