திம்புலபதன – கொட்டகலை பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் அறையொன்றில் தீ பரவியதாகவும், தீயினால் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.