ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்த வேண்டும் எனவும், காலநீடிப்பு இல்லாமல் விரைவாக முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று(16) மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் என்பது உண்மையிலே இந்த நாட்டில் ஏற்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலின்பின்னணியில் யார் யார் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போதும், அது இன்னும் முழுமை பெறாத ஒரு சூழலிலே ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கும் பொழுது முன்னாள் ஜனாதிபதி, தனக்கு அதனோடு சம்பந்தப்பட்டவர்களை தெரியும் என்று கூறியிருக்கிறார். மூளை சரியில்லாமல் வெளியிடும் கருத்துக்களை வெளியிடாமல் அவர் உண்மையான கருத்து சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், இந்தியா இலங்கைக்கு முக்கியமானது நாடு எனவும் அந்த உறவில் விரிசல்கள் ஏற்படாத வகையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.