ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குழு ஒன்றும் இந்த சந்திப்பில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் கட்சியின் பதில் செயலாளரினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படும் குழுவினர், கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டவிரோதமான அரசியல் குழுக் கூட்டமொன்று நேற்று இடம்பெற்றதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த அரசியல் குழு கூட்டம் அந்த கட்சியின் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தலைமையில் இடம்பெற்றதாக தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.