நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு…!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் இருபத்தைந்து இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2022 ஆம் ஆண்டில் 311,269  பேர் வெளிநாட்டு வேலைகளுக்காகவும், கடந்த ஆண்டில் 297,656 பேரும் வெளியேறியுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் எழுபது வீதமானவர்கள் தொழில்ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்கள் எனத் தெரிவித்த வசந்த அத்துகோரள, கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்கள், 45 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews