இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அண்மைகாலமாக பால்மா விலை உயர்வு காரணமாக, பால் தேநீர் அருந்துவதற்கு ஹோட்டல்களுக்கு வருவதை மக்கள் தவிர்த்து வந்தனர்.
தற்போது அந்த நிலை மாறி, மீண்டும் 80 ரூபாய்க்கு ஒரு கோப்பை பால் தேநீர் குடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.