குருநாகல் – ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், வைத்திய பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலதிக பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட சிறுமி உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போதும் இது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் குறித்த சிறுமி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.