நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்,
மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இடி, மின்னலுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த வானிலை அறிவிப்பு இன்றிரவு 11.30 வரை செலுப்படியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.