ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான “வாய்ப்பு எதுவும் இல்லை” என்று அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஹெலிகொப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
“விபத்தில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்தது. துரதிர்ஷ்டவசமாக, அனைவரும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் விபத்திற்குள்ளானது.
கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அசர்பைஜான் மற்றும் ஈரானின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் திறப்பு விழாவிற்காக ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் சென்று மீண்டும் திரும்பும் வழியில் இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.