கிராம உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் மாற்றம்…!

நாட்டிலுள்ள 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒரு தனி சேவையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு நாட்டில் 13,000 இற்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களுக்கு தனியான சம்பள மட்டம் வழங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதற்கிணங்கஇலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சேவையை உருவாக்குவதற்காக அச்சேவை தொடர்பான சட்ட மூலம் அரசாங்க சேவைகள் ஆணை குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை, பாரிய வெற்றி என்றும் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த நேற்றையதினம்(22) தெரிவித்தார்.

அதற்கு இணங்க GN என்ற பெயரில் புதிய சம்பள கூறு ஒன்றை கிராம உத்தியோகத்தர்களுக்காக வழங்குவதுடன், புதிதாக இச்சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் அடிப்படைச்சம்பளம் ரூபா 28,940 இலிருந்து ரூபா 30,140 வரை அதிகரித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் சேவை தரம் இரண்டில் உத்தியோகத்தர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ரூபா 33,690 வரையும், தரம் 3 உத்தியோகத்தர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ரூபா 38,590 வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பிரதேசம் மற்றும் எல்லைக்குள் மாதாந்த அலுவலகக் கொடுப்பனவாக ரூபா 1000 இலிருந்து 2000 வரையும், வருடாந்த எழுது கருவி கொடுப்பனவாக ரூபா1500 இலிருந்து 3000 வரை அதிகரிப்பை 2024.04.01இலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அது தவிர ஏனைய சீருடை,போக்குவரத்து, தொடர்பாடல் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளும் போது, பொதுத் திறைசேரியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்க்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews