யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 750000/- பெறுமதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்திக் கொடுக்கப்பட்டு நேற்று (26)சம்பிர்தாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தலமையில் இன்று பிற்பகல் 4:30 மணியளவில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்ட்டனர். தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதியை நிகழ்வின் பிரதம விருந்தினரும், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்துவைத்தார்.
தொடர்ந்து மங்கல சுடர் ஏற்றலுடன் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், அதன் தொண்டர்களான ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன், கரவெட்டி வைத்தியசாலை வைத்திய அதிகாரி வே.கமலநாதன், வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சாலை வைத்திய சாலை வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், மற்றும் ஊழியர்கள், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.