நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம், வைகாசி 22,மே 04/2024, செவ்வாய்க்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟮 🇮🇳꧂_*
*_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*
*_📆. 𝟬𝟰• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
சஞ்சலமான சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். குழப்பம் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️அஸ்வினி : குழப்பங்கள் ஏற்படும்.
⭐️பரணி : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐️கிருத்திகை : பயணங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். பூர்வீக விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்பு குறையும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️கிருத்திகை : அலைச்சல் ஏற்படும்.
⭐️ரோகிணி : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
⭐️பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : உற்சாகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். இறைப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் சில தெளிவுகள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.

⭐️மகம் : இழுபறிகள் மறையும்.
⭐️பூரம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளியிடங்களில் பொறுமையுடன் செயல்படவும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐️அஸ்தம் : திருப்பங்கள் ஏற்படும்.
⭐️சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️விசாகம் : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கால்நடை பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்.

⭐️விசாகம் : ஆதாயம் ஏற்படும்.
⭐️அனுஷம் : தீர்ப்பு கிடைக்கும்.
⭐️கேட்டை : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு உண்டாகும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.

⭐️மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
⭐️பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். உறவுகளின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தடை மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : அனுபவங்கள் ஏற்படும்.
⭐️திருவோணம் : செல்வாக்கு உயரும்.
⭐️அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
மனதளவில் இருந்துவந்த கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அவிட்டம் : கவலைகள் விலகும்.
⭐️சதயம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️பூரட்டாதி : நம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : கலகலப்பான நாள்.
⭐️உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
⭐️ரேவதி : மாற்றம் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews