நடைபெறவிருக்கும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கொடிகாமம் வர்த்தகர் சங்கம், சங்கானை வர்த்தக சங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான சந்நிப்புக்கள் அண்மையில் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான சந்திப்பு கடந்த 14.06.2024. வெள்ளிக்கிழமை மாலை கொடிகாமத்துல் இடம்பெற்றுள்ளது.
அதாஎவேளை அன்றைய தினம் சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனும் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம், மற்றும் தமிழ் மக்கள் ஒன்றுசேர தவறும்பட்சத்தில் தமிழ்மக்களின் வாக்குகளும் பலமும் சிதறும் ஆபத்துக்கள் பற்றியும், தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பாக கலந்துகொண்டோர் விளக்கமளித்துடன் குறித்த சங்கங்களின் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறான பல்வெஎறு சந்திப்புக்கள் அண்மை நாட்களில் பல்வேறு இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. இதற்கு பொது அமைப்பு பிரதிநிதிகள் பலரும் தமது தீவிர ஆதரவினை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிட தக்கது.