சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதற்கட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் மயப்படுத்தப்படும் என்று இக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் தற்போது பிரதான கட்சிகளின் ஆதிக்கம் இல்லை. பிரதானக் கட்சிகள் எனக் கூறப்படும் தரப்புகளெல்லாம் பல அணிகளாக பிளவுபட்டுள்ளன.
சர்வஜன அதிகாரமே சிறந்த மாற்று சக்தியாகும்.
30 முதல் 40 சதவீதமான வாக்காளர்கள் எந்த தரப்புக்கு வாக்களிப்பது என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. எமது அணியில் உள்ளவர்கள் எல்லாம் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
சர்வஜன அதிகாரம் தேர்தல் விஞ்ஞாபனம், வேலைத்திட்டத்தை முன்வைக்கவுள்ளது. முதற்கட்ட விஞ்ஞாபனம் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்தாடல் இடம்பெறும். அதன்பின்னர் அது இறுதிப்படுத்தப்படும்.” – என்றார்.