தம்பிஐயா பாலசிங்கத்தின் நினைவாக நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு

முன்னாள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் அமரர் தம்பிஐயா -பாலசிங்கம் அவர்களின் நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு நேற்று 22.06.2024 மாலை ஆழியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

34 வருடங்களாக சேவையாற்றி கடந்த வருடம் இறைபதம் அடைந்த அமரர் தம்பி ஐயா பாலசிங்கத்தின் சேவையை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.உதயகுமார் தலைமையில் நேற்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமானது

யுத்த காலத்தில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பல இலட்சம் பெறுமதியான சொத்து ஆவணங்களை பத்திரமாக எடுத்துச் சென்று மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்த தம்பி ஐயா பாலசிங்கத்தின் வரலாறும் சிறப்பாக இதன் போது நினைவு கூரப்பட்டது.

அமரர் தம்பி ஐயா-பாலசிங்கத்தின் நினைவு முத்திரை மற்றும் நினைவு மலர் வெளியிடப்பட்டதுடன் தம்பி ஐயா பாலசிங்கத்தின் மகன் உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்

இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஷ்வரன்,வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் ஓய்வு நிலை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான வி.கே அருந்தவநாதன், வடக்குமாகாண சபையின் மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன்,வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன்,மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய பிரதம குரு ச.யோகசம்பந்தக்குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பொதுமக்கள், அரச ஊழியர்கள், என பலர் கலந்து கொண்டதுடன் தம்பி ஐயா பாலசிங்கம் நினைவாக மரக்கன்றுகளும் வளங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews