முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேருக்கும், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதிரியாருக்கும் வழங்கப்பட்டு வரும் அனைத்து வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஒதுக்கீடுகள், அதிகாரபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்படும் என சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையின் முதல் தீர்மானமாக இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வரிச் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையிலான செல்வந்தர்கள் வரிச் செலுத்துவதில்லை எனவும் அவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானமிக்க ஒர் ஜனாதிபதியை நியமிப்பதே தமது நோக்கம் எனவும் இதுவரையில் ஆபத்தான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சியின் கீழ் மக்களுக்கு வரிச் சுமையிலிருந்து மீட்சி கிடைக்கும் எனவும்,
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.