இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 25, செவ்வாய்க்கிழமை, யூலை 09/2024.

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆனி 25, செவ்வாய்க்கிழமை, யூலை 09/2024.

*_♈ மேஷம் – ராசி: 🐐_*
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் கவனம் வேண்டும் பணியாளர்களால் சில விரயங்கள் உண்டாகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
⭐️பரணி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️கிருத்திகை : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
மறைமுக தடைகளால் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத பொறுப்புகளால் காலம் தவறி உண்பதற்கான சூழல் உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் ஏற்படும். நிர்வாக துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️கிருத்திகை : தாமதம் ஏற்படும்.
⭐️ரோகிணி : புரிதல் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனம் விட்டு பேசுவதால் தெளிவு பிறக்கும். இடம் மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கையும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். வியாபார நிறுவனங்களிடம் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : தெளிவுகள் பிறக்கும்.
⭐️திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
தன வருவாய்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு மேம்படும். அரசு தொடர்பான உதவிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.
⭐️பூசம் : முயற்சிகள் மேம்படும்.
⭐️ஆயில்யம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களின் ஒத்துழைப்புகளால் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மறைமுகமான வதந்திகள் தோன்றி மறையும். பிரீதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மகம் : விவாதங்கள் மறையும்.
⭐️பூரம் : மாற்றம் ஏற்படும்.
⭐️உத்திரம் : வதந்திகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
தவறிய சில வாய்ப்புகளின் மூலம் மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களிடம் பேசும் போது சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வங்கி துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பக்தி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்.

⭐️உத்திரம் : சஞ்சலங்கள் நீங்கும்.
⭐️அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️சித்திரை : பேச்சுக்களை குறைக்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணம் மேம்படும். உயர் கல்வியில் மேன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️சித்திரை : மேன்மை ஏற்படும்
⭐️சுவாதி : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️விசாகம் : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலை மறையும். வியாபார பணிகளில் முதலீடும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மேம்படும். தொழில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கெளரவ பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : ஒத்துழைப்பும் மேம்படும்.
⭐️கேட்டை : மதிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வெற்றி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️பூராடம் : மேன்மை உண்டாகும்.
⭐️உத்திராடம் : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
இழுபறியான செயல்பாடுகளை செய்வதில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️உத்திராடம் : கவனம் வேண்டும்.
⭐️திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வர்த்தக துறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். விருத்தி பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️அவிட்டம் : கவனம் வேண்டும்.
⭐️சதயம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மறதி பிரச்சனைகள் குறையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகத்தில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️பூரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்.
⭐️உத்திரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️ரேவதி : முடிவுகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews