இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஆனி 31, யூலை 15/2024 திங்கட்கிழமை

*_꧁‌. 🌈 ஆனி: 𝟯𝟭 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟱• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_♈ மேஷம் – ராசி: 🐐_*
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிம்மதி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️அஸ்வினி : வாய்ப்புகள் அமையும்.
⭐️பரணி : அறிமுகம் உண்டாகும்.
⭐️கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.

⭐️கிருத்திகை : திறமை வெளிப்படும்.
⭐️ரோகிணி : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : பொறுமை வேண்டும்.
⭐️புனர்பூசம் : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் உயரும். புதிய பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️புனர்பூசம் : பயணங்கள் சாதகமாகும்.
⭐️பூசம் : மதிப்புகள் உயரும்.
⭐️ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️மகம் : தீர்வு கிடைக்கும்.
⭐️பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
தவறிபோன சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு மேம்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீது இருந்துவந்த நம்பிக்கையின்மை நீங்கும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திரம் : ஆவணங்கள் கிடைக்கும்.
⭐️அஸ்தம் : ஆதரவு மேம்படும்.
⭐️சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : தாமதம் உண்டாகும்.
⭐️விசாகம் : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
திடீர் பயணங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான இறுக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். ரகசியமான சில முதலீடுகள் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும். மறதி குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : பயணங்கள் ஏற்படும்.
⭐️அனுஷம் : மாற்றமான நாள்.
⭐️கேட்டை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும். உறவினர்களால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசதி மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மூலம் : சோர்வுகள் குறையும்.
⭐️பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பெருமை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். வரவுகளில் சற்று கவனம் வேண்டும். அனுபவமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். போட்டி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews