பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு..மருந்தகத்தை மூட நீதிமன்றம் கட்டளை..!

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்று சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதாலும், அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும், அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்த யாழ்ப்பாண நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

குறித்த கட்டளையில் தெரிவிக்கப்டதாவது.
யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்து வியாபார ஸ்தானத்தில் ஒரு மரண நிகழ்வானது இடம்பெற்றிருக்கிறது. என்பது முறைப்பாட்டாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து காணப்படும், விடயங்களில் இருந்து, முகத்தோற்ற அளவில் மன்றுக்கு தெளிவாகின்றது.
யாழில் பொதுச்சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு பொதுச்சுகாதாரத்துக்கும்,உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பதாக கூறி அதாவது மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் குறித்த மருந்தகத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக உறவினரின் மரணச்சடங்கு நடத்திய மையால் வளிச்சீராக்கியை உரிய முறையில் இயக்காது
 உணவு மற்றும் மருந்துகள் பழுதடையக்கூடிய நிலையினை உருவாக்கியமை தொடர்பாக குறித்த மருந்தகத்தில் மரணச்சடங்கு நடத்திய காலப்பகுதியில் காணப்பட்ட மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் சமுதாயத்திற்கும், சுகாதாரத்திற்கும்,உடல் நலத்திற்கும் ஊறு விளைவிக்க கூடியதாக இருப்பதை மன்று திருப்தி அடைந்தது.
எனவே குறித்த மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் மருந்தகத்தின் செயற்பாடுகளை குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் பிரிவு 104 ற் கீழ் உடனடியாக நிறுத்தும் படி கட்டளையாக்கி ,இக் கட்டளையின் பிரகாரம் குறித்த மருந்தகம் நேற்று முன்தினல் மாலை மூடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews