ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றன தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது பரப்புரை கூட்டங்கள் இன்று காலை 10:45 நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம் பெறவுள்ளதுடன், தொடர்ந்து காலை 12:30 மணியளவில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வுள்ளதாகவும், தொடர்ந்து பிற்பகல் 3:00 மணியளவில “நமக்கு நாமே” தொடர் பிரச்சாரப்பயண தொடர்சியாக காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் நோக்கி நகரும் பரப்புரை அணியுடனும் இணைந்துகொள்ளவுள்ளார் என பா.அரியநேந்திரனின் ஊடக செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேவெளை நேற்றைய தினம் 23/08/2024. வெள்ளிக்கிழமை முதலாம் நாள் பரப்புரை பொலிகண்டியில் ஆரம்பித்து காங்கேசன் துறையில் நிறைவடைந்தமை குறிப்பிட தக்கது.