இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பூரட்டாதி 6, செப்டெம்பர் 22/2024, ஞாயிற்றுக்கிழமை…!

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟬𝟲 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟮• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
பேச்சுவன்மையின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், அதற்கான உதவிகளும் கிடைக்கும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️பரணி : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
⭐️ரோகிணி : வாய்ப்புகள் கைகூடும்.
⭐️மிருகசீரிஷம் : கனிவு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறத்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பகை மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : அபிவிருத்தியான நாள்.
⭐️திருவாதிரை : புரிதல்கள் மேம்படும்.
⭐️புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூசம் : தாமதங்கள் அகலும்.
⭐️ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். மாணவர்கள் கல்வி கற்பதில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மகம் : தெளிவுகள் ஏற்படும்.
⭐️பூரம் : வாய்ப்புகள் அமையும்.
⭐️உத்திரம் : அமைதி நிலவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
சிந்தனையின் போக்கில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் லாபம் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். மறதி விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️அஸ்தம் : லாபங்கள் மேம்படும்.
⭐️சித்திரை : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️சித்திரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️சுவாதி : கவனம் வேண்டும்.
⭐️விசாகம் : செலவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️விசாகம் : அனுகூலமான நாள்.
⭐️அனுஷம் : சலுகைகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள். வங்கி பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலைகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மூலம் : வரவுகள் உண்டாகும்.
⭐️பூராடம் : இழுபறிகள் குறையும்.
⭐️உத்திராடம் : திருப்திகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : இலக்குகள் உண்டாகும்.
⭐️திருவோணம் : கவனம் வேண்டும்.
⭐️அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதளவில் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️அவிட்டம் : அனுபவங்கள் ஏற்படும்.
⭐️சதயம் : புரிதல்கள் மேம்படும்.
⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பாசம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️ரேவதி : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews